சென்னை: ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராயபுரம் மண்டலம் எழும்பூர், வேனல்ஸ் சாலையில் கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (18ம்தேதி) இரவு 10 மணி முதல் 19ம்தேதி காலை 10 மணி வரை (12 மணி நேரம்) மண்டலம் – 5 மற்றும் மண்டலம் 9-க்குட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்காக ராயபுரம் மண்டல பகுதி அலுவலரை 8144930905 என்ற எண்ணிலும், தேனாம்பேட்டை மண்டல பகுதி அலுவலரை 8144930909 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இன்று கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
