×

பிரெட் கீர்

தேவையானவை:

பிரெட் ஸ்லைசுகள் – நான்கு,
கண்டன்ஸ்டு மில்க் – ¼ கப்,
காய்ச்சிய பால் – 1 கப்,
சர்க்கரை – 5 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்,
துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். அதனுடன் பால் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். வாணலியில் அரைத்த விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கி மேலே துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை தூவி பரிமாறவும். சுவையான கீர் தயார்.

The post பிரெட் கீர் appeared first on Dinakaran.

Tags : Fred Keir ,
× RELATED சோயா பீன்ஸ் பிரை