‘2029 வரை நாங்கதான் ஆட்சியில் இருப்போம்’ எங்கள் பக்கம் வாருங்கள் என உத்தவ்.வுக்கு பட்னாவிஸ் அழைப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் (மகா விகாஸ் அகாடி) உள்ள சிவசேனா பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆளும் பாஜ (மகாயுதி) கூட்டணியில் இணையுமாறு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மகாராஷ்டிராவில் ஆளும் பாஜ அரசு, இந்தியை 3வது கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகம் செய்தது. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் போராட்டம் நடத்தினர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த உத்தரவை பட்நாவிஸ் அரசு திரும்ப பெற்றது.

மேலும் சிறப்பு பொது பாதுகாப்பு மசோதாவை “பாஜ பாதுகாப்பு மசோதா” என்று உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார். இந்த மசோதா சாதாரண குடிமக்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசுக்கு உரிமை வழங்கும் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், 2029ம் ஆண்டு வரை தங்கள் அரசு எதிர்க்கட்சியாக மாறும் வாய்ப்பே இல்லை. அதனால் உத்தவ்ஜி இந்த பக்கம் வரும் வாய்ப்பை பற்றி சிந்திக்கலாம்’ என்றார். இதனால் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ‘2029 வரை நாங்கதான் ஆட்சியில் இருப்போம்’ எங்கள் பக்கம் வாருங்கள் என உத்தவ்.வுக்கு பட்னாவிஸ் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: