×

4 பேர் கும்பலுக்கு வலை அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாக்கியராஜ், எழிலரசி, சக்கரபாணி, சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கருணாமூர்த்தி வரவேற்றார்.

ஆசிரியர்கள் முகமது ரபிக், பாலசுப்பிரமணியன் ஆகியோர் பள்ளியில் முதலிடம் பிடித்த லோகேஸ்வரனுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2,500, இரண்டாம் இடம் பெற்ற குகன் மற்றும் மோனிகா ஆகியோருக்கு தலா ரூ.1,500, மூன்றாம் இடம் பிடித்த புருஷோத்திற்கு ரூ.1000 வேலைவாய்ப்பு திறன்கள் பாடத்தில் முதலிடம் பெற்ற லோகேஸ்வரனுக்கு ரூ.1000, அடிப்படை மின்பொறியியல் பாடத்தில் முதலிடம் பெற்ற புருஷோத்திற்கு ரூ.1000 என வழங்கி பாராட்டினர்.

முதுகலை தமிழாசிரியர் பாஸ்கரன் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மோனிகாவிற்கு ரூ.2,000 மற்றும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற லோகேஸ்வரன் மற்றும் குகனிற்கு ரூ.1000 வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள் ஆடின் மெடோனா, முத்துராமன், உமாமகேஸ்வரி, வெற்றி செல்வி, சத்தியகலா, ஸ்வர்ணா, இலக்கியா, நிலோபர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் அன்புமணி நன்றி கூறினார்.

The post 4 பேர் கும்பலுக்கு வலை அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Thiruvarur District Government Men's Secondary School ,Balamurugan ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...