×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடிமாத அம்மன் கோயில் சுற்றுலா இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 17: ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயிலில் சுற்றுலா சென்றுவர தமிழ்நாடு சுற்றுலாக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா 18.07.2025 முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுவா வளர்ச்சிக் கழகம் ஆன்மிக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா 18.07.2025 அன்று முதல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது.

ஆடி அம்மன் சுற்றுலா தஞ்சாவூர் ஓட்டல் தமிழ்நாடு, காந்திஜி ரோடு, தஞ்சாவூரிலிருந்து வராகி அம்மன் (பெரிய கோவில்) திருக்கோவில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மகா மாரியம்மன் திருக்கோயில் புன்னைநல்லூர், கற்பரட்சாம்பிகை திருக்கோயில் திருக்கருகாவூர், துர்கை அம்மன் திருக்கோவில் பட்டீஸ்வரம் பாடைகட்டி மகா மாரியம்மன் திருக்கோயில் வலங்கைமான், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை, காசி விஸ்வநாதர் விசாலாட்சி திருக்கோயில் மகாமககுளம் கும்பகோணம், அருள்மிகு ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்) திருக்கோயில் தாராசுரம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இச்சுற்றுவாவிற்கான கட்டணம் ரூ.1400. எனவே ஆன்மீக சுற்றுலா பயணிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ttdconline.com < http://www.ttdconline.com/ என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 180042531111, 9176995832, 04362-231972, 04362-231421 என்ற தொலைபேசி எண், மற்றும் வாட்ஸ் அப் 7550063121 தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடிமாத அம்மன் கோயில் சுற்றுலா இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Tourism Development Corporation ,Amman Temple ,Aadi ,Thanjavur ,Amman ,Amman Temple Tourism ,Education ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...