அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

 

திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பதிவு மாவட்ட சார் பதிவகங்களின் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிர்ணய வரைவானது கடந்த 9-ம் தேதி நடைபெற்ற திருப்பூர் மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழு கூட்டத்தில், பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் செயலாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் (நிருவாகம்), மதிப்பீட்டு துணைக்குழு, 1/529, நெருப்பெரிச்சல் கிராமம், பூலுவப்பட்டி அஞ்சல், திருப்பூர் 641 602 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட பொதுமக்களுக்கு தெரிவித்திட முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: