திருப்பூர், ஜூலை 17: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் அடிப்படை என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ஏ.கே.சண்முகம், செயல் தலைவர் என்.எஸ்.பி வெற்றி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநகர் மாவட்ட தலைவர் கோகுல் ரவி, கரூர் மாவட்ட தலைவர் பாலுகுட்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும், அப்படி ரத்து செய்யும் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை கட்டமாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
The post சிபில் அடிப்படையில் பயிர்கடன் வழங்கும் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் appeared first on Dinakaran.
