×

தேவகோட்டை பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை

தேவகோட்டை, ஜூலை 17: தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேவகோட்டை உட்கோட்ட காவல் சரகத்தில் உள்ள, காவல்நிலைய எல்கைப்பகுதியில் எந்தவொரு தனி நபரும் முறையான அனுமதி பெறாமல் நோட்டீஸ் ஒட்டுவதற்கோ அல்லது பிளக்ஸ் பேனர் வைப்பதற்கோ அனுமதி மறுக்கப்படுகிறது. விதிமுறைகளை மீறி, உரிய அனுமதியின்றி, பொது இடத்தில் பிளக்ஸ் பேனர் வைத்தாலோ அல்லது நோட்டீஸ் ஒட்டினாலோ சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

The post தேவகோட்டை பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Deputy Superintendent of ,Police Gautham ,Devakottai Utkottai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...