- திருவள்ளூர் கலெக்டரேட்
- திருவள்ளூர்
- பொதுப்பணித் துறை
- திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி
- வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தித் திணைக்களம்
- தின மலர்
திருவள்ளூர், ஜூலை 17:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பாக ரூ.3 கோடி மதிப்பில் புதிய சுற்றுலா மாளிகை கட்டடப் பணிகள் மற்றும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக ரூ.3.33 கோடி மதிப்பில் புதிய மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டடப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், உதவி செயற் பொறியாளர் மனோகரன், நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் சஹானா, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் திருப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையின் பின்புறத்தில் பொதுப்பணித் துறை சார்பாக புதிய சுற்றுலா மாளிகை கட்டிடம் 4745.16 சதுர அடி பரப்பில் 3 முக்கிய விருந்தினர்கள் அறை, ஒரு கூட்ட அரங்கம், ஒரு ஓய்வறை, சமையலறையுடன் கூடிய சாப்பாட்டு அறை, முகப்பு அறையுடன் கட்டப்படவுள்ளது.
வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் பின்புறத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடம் 8503.84 சதுர அடி பரப்பில் தரைதளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் அமைகிறது. தரைத் தளத்தில் உதவி இயக்குநர் அறை, 2 துணை இயக்குநர் அறைகள், நிர்வாக அறை, பதிவு அறை மற்றும் முகப்பு அறை, முதல் தளத்தில் தொழில்நுட்ப பிரிவு 1, தொழில்நுட்ப பிரிவு 2, கலந்தாய்வு அரங்கம், பதிவு அறை மற்றும் கிடங்கு ஆகியவை அமைகிறது.
The post திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.6.33 கோடியில் 2 புதிய கட்டிடப்பணி appeared first on Dinakaran.
