- ஆய்வக
- காஞ்சிபுரம்
- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் PVA பன்னாட்டு பள்ளி
- கலிச்செல்வி மோகன்
- மாவட்டம்
- தலைமை கல்வி அதிகாரி
- மகேஷ்
- லவ்
- தின மலர்
காஞ்சிபுரம், ஜூலை 17: காஞ்சிபுரம் பிவிஏ பன்னாட்டு பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று, கற்றல் அறிவித்திறனை அதிகரிக்க வேண்டி பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தமிழ்ச்செல்வி, கற்றல்திறன் அறிவு அதிகரிப்பதற்கான திட்டமிடல் குறித்து பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் நளினி நன்றி கூறினார். இதில், 300க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ், நிருபர்களிடம் கூறுகையில், ‘பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, அவர்களை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் அழைத்து கருத்துக்களை கேட்டனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசென்று, சாத்தியம் இருந்தால் இக்கருத்துக்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.
`ப’ வடிவில் மாணவர்கள் இருக்கை என்பது சோதனை கட்டத்தில் உள்ளது. அனைத்து மாணவர்களும் இதே வடிவில் அமர வேண்டும் என்று அரசாணையோ, கட்டாயமோ இல்லை. எங்கெல்லாம் பயனுள்ளதாக உள்ளதோ அங்கு `ப’ வடிவில் மாணவர்கள் இருக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இது, ஆலோசனை மட்டுமே, மேலும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக உள்வாங்கி, அதை தலைமை ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தினாலே நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆங்கிலமும், தமிழும் கற்க வேண்டும். தாய்மொழியான தமிழ் மொழியை கற்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.
The post காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான தலைமையாசிரியர்கள் அடைவு தேர்வு ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு appeared first on Dinakaran.
