ஜார்க்கண்ட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

பொக்காரோ: ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டம் பிர்ஹோர்டேரா அடர்ந்த வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று அதிகாலை அங்கு விரைந்த சிஆர்பிஎஃப்பை சேர்ந்த சிறப்பு கோப்ரா படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நக்சல்ளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில்2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கோப்ரா படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

The post ஜார்க்கண்ட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை: சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் appeared first on Dinakaran.

Related Stories: