அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அதிகாரி சியாமலா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் அதிகாரிகள் பட்டு வஸ்திரத்தை மடத்தில் இருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமர்பிக்கப்பட்டது. மணி மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதி எதிரே ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சர்வபூபால வாகனத்திலும், விஷ்வசேனாதிபதி உற்சவர் கொலு புதிய வஸ்திரம் மூலவருக்கும் உற்சவருக்கும் சமர்பிக்கப்பட்டது.
மாலை வாகன மண்டபத்தில் இருந்து பல்வேறு வகையான மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வீதி உலாவின் போது சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நான்கு மாட வீதியில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு கற்பூரம் ஆரத்தி எடுத்து மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
The post ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து பட்டு வஸ்திரம் appeared first on Dinakaran.
