வருமான வரி சட்ட வரைவு மசோதாவில் 285 திருத்தங்கள்: எம்.பி.க்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: வருமான வரி சட்ட வரைவு மசோதாவில் 285 திருத்தங்களை ஒன்றிய அரசுக்கு எம்.பி.க்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. 1961 ஆண்டின் வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய பாஜ எம்.பி பைஜயந்த் பாண்டா தலைமையில் மக்களவை உறுப்பினர்களை கொண்டு தேர்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு புதிய வருமான வரி வரைவு சட்டத்தில் 285 திருத்தங்களை செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிக்கைக்கு தேர்வுக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. தேர்வு குழுவின் அறிக்கை வரும் 21ம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேர்வு குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்கும் என்றும் மசோதாவில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என தகவல்கள் வௌியாகி உள்ளன.

The post வருமான வரி சட்ட வரைவு மசோதாவில் 285 திருத்தங்கள்: எம்.பி.க்கள் குழு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: