வட இந்தியாவில் ஷ்ரவன் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் திங்கட்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, ‘ஓம் நமச்சிவாய’ மந்திரம் ஓதுகிறார்கள். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது அமைதியையும், வளத்தையும், ஆன்மீக பலத்தையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் முக்கியமானது கன்வார் யாத்ரா. இதில் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் புனித கங்கை நதிக்கு வெறுங்காலுடன் நடந்து சென்று, பானைகளில் கங்கை நீரை எடுத்து வந்து, தங்கள் ஊர்களில் உள்ள உள்ளூர் கோயில்களில் இருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
The post வட இந்தியாவில் ஷ்ரவன் மாதம் கோலாகலம் : சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள்!! appeared first on Dinakaran.
