ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் வழக்கு!!

சென்னை: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், 2 படங்களில் நடிக்க நடிகர் ரவிமோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக அவர் ரூ.6 கோடி முன்பணம் வாங்கியதாகவும் தெரிவித்த நிறுவனம், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை துவங்காததால் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது.

மேலும், அந்த பணத்தை சொந்த தயாரிப்பு, சொந்த செலவுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் நடிக்க ரவிமோகனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவிமோகன் பதிலளிக்க உத்தரவிட்டு, வருகிற 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தான் படப்பிடிப்பை தொடங்கவில்லை. கால்ஷீட் கொடுத்ததால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போனதாக அவர் மனுவில் குற்றச்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்குடன், நடிகர் ரவி மோகன் மனுவையும் விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைக்கப்பட்டது.

The post ரூ.6 கோடியை கேட்டு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகனும் வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: