இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர். பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக பிடித்த உணவுப் பொருட்களை படைத்து, மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
The post கும்பகோணத்தில் தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பெற்றோர், பொதுமக்கள் அஞ்சலி! appeared first on Dinakaran.
