பெரணமல்லூர், ஜூலை 16: பெரணமல்லூர் அடுத்த அல்லியந்தல் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் இளையராஜா வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் செயல்படும் குவாரி மூலமாக கனிம வளநிதி ஆதார திட்டத்தின் கீழ் சுமார் ரூ.8 லட்சம் அல்லியந்தல் அரசு உயர்நிலை பள்ளிக்கு நம்ம ஸ்கூல் நம்மஊரு பள்ளி திட்டததில் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ1.25 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் போர்ட் வகுப்பறையை அமைப்பின் பொறுப்பாளர்கள் கோவிந்தன் மற்றும் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிடிஏ தலைவர் முனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் எழிலரசன் நன்றி கூறினார்.
The post பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் ஸ்மார்ட் போர்ட் வகுப்பறை தொடக்கம் appeared first on Dinakaran.
