தண்டராம்பட்டு, ஜூலை 16: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் கொளமஞ்சனூர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, பாக்கு, ஹன்ஸ் உள்ளிட்ட பொருட்கள் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
காரை ஒட்டி வந்தவரை பிடித்து விசாரித்தபோது சிக்லூர்கிராமத்தைச் சேர்ந்த உமர் மகன் தஸ்தகீர்(33) என தெரியவந்தது. இவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து தண்டராம்பட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே காரை பறிமுதல் செய்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தர்மபுரியில் இருந்து தண்டராம்பட்டிற்கு காரில் போதை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.
