செய்துங்கநல்லூர், ஜூலை 16: தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாடு மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கனிமொழி எம்பி முயற்சியால் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசுகையில் ‘‘ ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்துச் செயல்களையும் துல்லியமாக இத்தொழில்நுட்பம்மூலம் பயன்படுத்த முடியும். இனிவரும்காலங்களில் விவசாயம், எழுத்தாளர் உள்ளிட்ட அனைத்துவகையிலும் ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைத்துசெயல்படுகின்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம். இன்றைக்கு உலகத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, எந்தவித தயக்கமும் இல்லாமல் மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.
நாம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ஏஐதொழில்நுட்பம் நமது வாழ்விற்குள் வந்துகொண்டிருக்கிறது. நமது உரையாடலுக்கு கூட சாட்ஜிபிடி, ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மனிதஉறவுகளை மாற்றுவதற்கு எதுவுமே கிடையாது. மனிதர்களுக்கு யாருடைய தேவையும் இருக்காது என்றசூழ்நிலை வரவே இயலாது. உருவாக்கவும் முடியாது. குறிப்பாக இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலமாக தலைவர்கள்உள்ளிட்டவர்களின் முகத்தை வைத்து அவர்கள்பேசாதவற்றை பேசியதாக மாற்றி சமூக வலைதளங்களில்வெளிவரக்கூடிய நிலை இருக்கிறது. இது குறித்து அறிந்துகொண்டு இதை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சட்டம்இயற்றுகிறவர்களாக நீங்கள் வரவேண்டும். இதை தவறாகபயன்படுத்துகிறவர்களிடமிருந்து இந்த சமூகத்தைகாப்பாற்றக்கூடிய தொழில்நுட்பம் குறித்தும், இந்தசமூகத்திற்கு பயன்பெறக்கூடிய தொழில்நுட்பத்தைஉருவாக்குகிறவர்களாகவும் நீங்கள் வருவதற்கு இது ஒருவழியாக இருக்கும்’’ என்றார்.
நிகழ்வில் சண்முகையா எம்எல்ஏ பேசுகையில் ‘‘தமிழகத்தில் கல்வியை மேலோங்கச்செய்திட அரசு மாதிரி பள்ளி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இதனால் தமிழகம் கல்வியில் மெருகேறி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகளின் நலன்கருதி செயல்படும் கனிமொழி எம்.பி., முயற்சியால் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வைகுண்டம் தாசில்தார் ரத்தினசங்கர், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திர பாபு, ஆசிரியர்கள், ஏஐ பயிற்றுநர்கள், மாணவ- மாணவிர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post ஏஐ தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.
