×

சாத்தான்குளம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடை

சாத்தான்குளம், ஜூலை 16: சாத்தான்குளம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடையை விரைவில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தி அம்மன் கோயில், நகனை விலக்கு பகுதியில் பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் செல்வதற்கான பெரிதும் பயன்படுத்தப்படும் இச்சாலையில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையால் மாடத்தி அம்மன், மருதமலை சாஸ்தா கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த பலனடைந்து வந்தனர். ஆனால், தற்போது குப்பை நிறைந்தும், புதர் மண்டியும் கிடப்பதால் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி முழுமையாக சீரமைப்பதோடு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத்தலைவர் லூர்து மணி கூறுகையில் ‘‘இந்த பயணியர் நிழற்குடை சாத்தான்குளம் மெஞ்ஞானபுரம் இடையே பிரதான சாலையில் அமைந்துள்ளது. இந்த பயணியர் நிழற்குடையை மாடத்தி அம்மன் கோயில், மருதமலை சாஸ்தா கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது முள்செடிகள் சூழ்ந்து காணப்படுவது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும் இந்த பயணியர் நிழற்குடையை முழுமையாகப் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவருமாறு தூத்துக்குடி கலெக்டரிடமும் கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். பட்டியல் பழங்குடியினர் காட்டுநாயக்கர் மக்களுக்கு விரைவில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

The post சாத்தான்குளம் அருகே புதர் மண்டிக்கிடக்கும் பயணியர் நிழற்குடை appeared first on Dinakaran.

Tags : Sathankulam ,Madathi Amman Temple ,Naganai ,Union ,Pannampara Panchayat… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...