கோரையாற்றிலிருந்து குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறப்பு

முத்துப்பேட்டை, ஜுலை 16: முத்துப்பேட்டை அருகே புதியதாக உருவாக்கப்பட்ட பாசன வாய்க்காலில் இருந்துகுறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் செல்லும் பள்ளியமேடு வாய்கால் என்பது கோரையாற்றில் பிரிந்து கிளந்தாங்கி ஆறு வழியாக செல்கிறது இதிலிருந்து இடும்பாவனம் உள்ளிட்ட சுற்று பகுதியில் உள்ள சாகுடி செய்யமுடியாத விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், கோரையாற்றிலிருந்து பிரிந்து மறைக்காகோரையாறு வழியாக நீர் செல்லும் வகையில் பாசன வாய்க்கால் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் இணைப்பு வாய்க்கால்கள் புனரமைக்கும் பணிகள் துவங்கி சில மாதங்களாக பணிகள் நடந்து வந்து நிறைவு பெற்றது இதன் மூலம் மிகப்பெரிய பாசனத்தை பெற்றுத்தரும் முக்கிய வாய்காலாக மாறியுள்ளது. இந்தநிலையில் நேற்று இந்த பாசன வாய்க்காலுக்கு அங்குள்ள தடுப்பு அணையிலிருந்து நீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு பூஜைகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கலந்துக்கொண்டு பணியை துவக்கி வைத்தார், இதில் முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை குழு தலைவர் மனோகரன், திருத்துறைப்பூண்டி வெண்ணாறு வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் பாலாஜி, மற்றும் ஒப்பந்தக்காரர்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post கோரையாற்றிலிருந்து குறுவை சாகுபடிக்கு பாசன நீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: