- அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம்
- அனைத்து
- -துறை
- ஓய்வூதியம்
- சங்கம்
புதுக்கோட்டை, ஜூலை 16: ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா தொடக்கவுரையாற்றினார். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்துசெய்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டும். நான்கு தொகுப்புகளாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். தொடர் வண்டியிலும் வான் ஊர்தியிலும் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
The post புதுக்கோட்டையில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
