×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

புதுக்கோட்டை, ஜூலை 16: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நேற்று முதல் வரும் அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வு காணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

இம்முகாம் நாளை புதுக்கோட்டை மாநகராட்சி, 1 மற்றும் 2 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சமுதாயக்கூடம் சமத்துவபுரம் இடத்திலும்; பொன்னமராவதி பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு வலையப்பட்டி நகரத்தார் திருமண மண்டபம், வலையப்பட்டி, பொன்னமராவதி இடத்திலும்; திருமயம் ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கப்பத்தான்பட்டி, லெம்பலக்குடி இடத்திலும்; அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு சுய உதவிக் குழு கட்டிடம், ஆவணத்தான்கோட்டை இடத்திலும்;

விராலிமலை ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு அகரப்பட்டி, சேவை மையக் கட்டிடம் இடத்திலும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு நூர் மஹால், அண்டக்குளம் இடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில், பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,Collector ,Aruna ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...