×

பெரம்பலூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

பெரம்பலூர், ஜூலை. 16: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய கோரிக்கை நாள் முன்னிட்டு ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி , மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்தில், ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நான்கு தொகுப்பாக கருதப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்து, ஊழியர்களிடம் பித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுக்கு திருப்பி தந்திட நிதி மேலாளருக்கு ஆணை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாநில அரசுகளை நடத்த வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும், மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி 55 விழுக்காட்டை அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை மத்திய மாநில அரசுக்கு வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

இந்த இந்த தர்ணா போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Government All Sector Pensioners' Associations ,Tarna ,Perambalur ,District Governor's Office of Perambalur ,Tamil Nadu Government All Sector Pensioners Association ,All India Demand Day ,District Chief Governor ,Government All Sector Pensioners Association ,Tarna Struggle ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...