- கல்வி அபிவிருத்தி நாள்
- காமராஜ்
- அரியலூர்
- முதல் அமைச்சர்
- பெருந்தலைவர் காமராஜ்
- சிறுவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி
அரியலூர், ஜூலை 16: மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் முருகேசன் கலந்து கொண்டு, தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் பல தொழிற்சாலைகள், அணைக்கட்டுகளை காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டதாகவும். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று வாய்ப்புகளை வழங்கிய காமராஜரை அனைவரும் போற்றி வணங்க வேண்டும் என்றார்.
பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, செந்தில்குமரன், வெங்கடேசன், அபிராமி, பாலமுருகன், அந்தோணிசாமி, ஆய்வக உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
The post காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.
