×

அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 

அன்னூர், ஜூலை 16: கோவை மாவட்டம், அன்னூர் தாலுகா, குப்பனூர் ஊராட்சியை சேர்ந்த ஆலங்குட்டையில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி மண் எடுத்து கடத்தப்படுவதாக வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதை அடுத்து அன்னூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் குருநாதன், தெற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் மருதாசலம், போலீஸ் எஸ்.எஸ்.ஐ கனகராஜ், தலைமை காவலர் குருசாமி ஆகியோர் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர்.

இதில் ஆலங்குட்டையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து வந்த டிப்பர் லாரியும், லாரிக்கு மண் ஏற்றிய பொக்லின் இயந்திரமும் பிடிபட்டது. இதனை வருவாய்த்துறையினர் அன்னூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் ஜெயகண்ணன், ஓட்டுநர் நாகார்ஜுன் (20) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஓட்டுநர் நாகார்ஜுனை கைது செய்து அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

The post அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Annur ,Revenue Department ,Alankuttai ,Kuppanur panchayat ,Annur taluka ,Coimbatore district ,Annur North Revenue ,Inspector ,Gurunathan ,South Revenue… ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...