×

துணை முதல்வர் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

திருவள்ளூர், ஜூலை 16: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், வரும் 20ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ் செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் அண்ணாமலை, ஜனார்த்தனன், இளையான், புகழேந்தி, பாஸ்கர், பிரபாகரன், பிரகாஷ், பரிமேலழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பூமிபூஜை போட்டு பந்தல் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் குமரேசன், தணிகாசலம், ஸ்டாலின், ராம்பாபு, கேசவன், பாலா, சுமதி, உண்ணாமலை, அன்னம், ஞானமூர்த்தி, துரைமுருகன், பாபு, துவாரகேஷ், லிங்கேஷ்குமார் மற்றும் கிளை செயலாளர்கள் புருஷோத்தமன், ராசையன், சுதாகர், குமார், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post துணை முதல்வர் பங்கேற்கும் விழா பந்தல் அமைக்கும் பணி : எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,MLA ,Thiruvallur ,Udhayanidhi Stalin ,Poonamalli East Union DMK ,Union… ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு