- கும்மிடிப்பூண்டி
- டி.ஜே.கோவிந்தராஜன்
- UNICO உலக சாதனை நிறுவனம்
- சிலம்பா கலை மையம்
- கும்மிடிப்பூண்டி…
- தின மலர்
கும்மிடிப்பூண்டி, ஜூலை 16: கும்மிடிப்பூண்டியில் நெருப்பில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பரிசு வழங்கினார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் சிலம்ப கலைக்கூடத்துடன் யுனிகோ வேல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து நடத்திய உலக சாதனை சிலம்பாட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சியாளர் வினோத் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசான்கள் ஞானமூர்த்தி, ஏழுமலை, ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். கும்முடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத்தலைவர் கேசவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விமலா அர்ஜூனன், வழக்கறிஞர்கள் சேகர், கோபி, தீனதயாளன், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் கலந்துகொண்டு 130 சிலம்பாட்ட மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் ஸ்டார் தீப்பந்த வடிவில் சிலம்பம் சுற்றிய உலக சாதனை நிகழ்வினை தொடங்கி வைத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியை ரவி, கண்ணன் சதாசிவம், சுரேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஒரே நேரத்தில் 130 மாணவர்கள் நெருப்பில் சிலம்பம் சுற்றியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியது. உலக சாதனை நிகழ்த்திய சிலம்பாட்ட மாணவர்களுக்கு யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் இயக்குனர் சிவராமன், முதல் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி சிலம்பாட்ட மாணவர்களை பாராட்டி பேசினார்.
The post கும்மிடிப்பூண்டியில் நெருப்பில் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை: எம்எல்ஏ பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.
