×

மும்பையில் முதல் ஷோரூம்: இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனை துவக்கம்

மும்பை: நாட்டிலேயே முதன் முறையாக மும்பையில் டெஸ்லா ஷோரூமை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நேற்று திறந்து வைத்தார். புதிய காரை அறிமுகம் செய்தார். மின்சார கார்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா முதன் முறையாக இந்தியாவில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் புதிய ஷோரூமை திறந்துள்ளது. இதனை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், டெஸ்லா ஒய் மாடல் காரை பட்நவிஸ் அறிமுகம் செய்தார். 2 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.59.89 லட்சம். ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கி.மீ தூரம் வரை செல்லும். தொலை தூர பயணத்துக்கான மற்றொரு வேரியண்ட் அதிகபட்சமாக 622 கி.மீ தூரம் வரை செல்லும். 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 267 கி.மீ தூரம் வரை செல்லலாம். இதன் ஷோரூம் விலை ரூ.67.89 லட்சம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. 15.4 அங்குல தொடு திரையுடன் கூடிய டிஸ்பிளே, 8 கேமராக்கள், பனோரமிக் சன்ரூப் உட்பட பல அம்சங்கள் உள்ளன.

The post மும்பையில் முதல் ஷோரூம்: இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Tesla ,India ,Chief Minister ,Devendra Fadnavis ,Mumbai Bandra… ,Dinakaran ,
× RELATED தங்கம் விலை மாற்றமில்லை; வெள்ளி கிராமுக்கு ரூ.6 குறைந்தது