×

மகளிர் உலக கோப்பை செஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வைஷாலி ; கஜகஸ்தான் வீராங்கனையுடன் மோதல்

படுமி: ஃபிடே மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில், தமிழகத்தின் வைஷாலி உள்பட 4 இந்திய வீராங்கனைகள், அபார வெற்றிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். ஜார்ஜியாவின் படுமி நகரில் ஃபிடே மகளிர் உலக கோப்பை செஸ் போடடிகள் நடந்து வருகின்றன.

இதில் அபாரமாக ஆடி வரும் இந்திய வீராங்கனைகள், தமிழகத்தின் வைஷாலி, திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி ஆகிய நால்வரும் காலிறுதிக்கு முந்தைய, 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதையடுத்து, உலகளவில் 4ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஸு ஜினெர் உடன், காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் திவ்யா தேஷ்முக் மோதவுள்ளார்.

அதேபோல், ரஷ்யாவை சேர்ந்த, 2008 -2010 ஆண்டுகளில் மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியனாக திகழ்ந்த அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக் உடன் கொனேரு ஹம்பி மோதுவார். ஐரோப்பிய மகளிர் செஸ் சாம்பியனாக 2 முறை பட்டம் வென்ற ரஷ்ய வீராங்கனை கேதரினா லாக்னோ உடன் ஹரிகா துரோணவல்லி களமிறங்குவார். கஜகஸ்தான் கிராண்ட் மாஸ்டர் மெருவர்ட் கமலிதெனோவா உடன் வைஷாலி மோதவுள்ளார்.

The post மகளிர் உலக கோப்பை செஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வைஷாலி ; கஜகஸ்தான் வீராங்கனையுடன் மோதல் appeared first on Dinakaran.

Tags : Women's World Cup Chess ,Vaishali ,Kazakhstan ,Batumi ,FIDE Women's World Cup Chess ,Tamil Nadu ,Batumi, Georgia… ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...