முதல்கட்ட தகவலின்படி பர்சேகரில் உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்த வினோத் மேட்(28) கோடபாட்கு கிராம பள்ளியில் ஆசிரியராக இருந்தார். டெக்கமேடா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மெட்டா உள்ளூர் பள்ளியிலேயே பணியாற்றினார். இவர்களை வெவ்வேறு இடங்களில் நக்சல்கள் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு போலீசார் விரைந்துள்ளனர். இருவரது சடலங்களையும் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இருவரின் சடலங்களும் மீட்கப்படவில்லை.
The post போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்; அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவரை கொன்ற நக்சல்கள்: சட்டீஸ்கரில் பயங்கரம் appeared first on Dinakaran.
