தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு பணி நிரந்திரம் ஊதிய உயர்வு செய்யவேண்டும் என்பது தான் மிக முக்கிய கோரிக்கையாக தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாணவர்களின் நலனிற்காக பகுதி நேரமாக மட்டுமே பணிசெய்யவில்லை . நாள் முழுவதும் பணி செய்து வருகிறோம். கல்வி துறை வளர்ச்சிக்காக பணி செய்து வருகிறோம். எனவே பணி நிரந்தரம் செய்வதிற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். அமைச்சர் அதிகரிகள் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திதான் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் போராட்டத்திற்கு வரக்கூடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தற்போது வரை 200 கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து இன்னும் ஒரு 1 மணி நேரம் இதுபோன்று வரக்கூடிய ஆசிரியர்களுக்கு அணுமதி இல்லாத காரணத்தால் கைது செய்வதிற்கான நடவடிக்கையும் காவல்துறை எடுத்திருக்கிறார்கள். கைது செய்யகூடிய பகுதி நேர ஆசிரியர்களை மண்டபத்தில் தங்கவைத்து இன்று மாலை 5 மணி அளவில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
The post பகுதிநேர ஆசிரியர்கள் இன்றும் போராட்டம் கைது appeared first on Dinakaran.
