படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்கு கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
படி படி என்கிற திராவிடத்தில் கிளை விட்டு விட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக் கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது திமுக மாணவரணி அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை. கடந்த கால அதிமுக ஆட்சிகளிலும் கோயில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் திராவிடன் ஸ்டாக் கூட்டம்.

The post படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்கு கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: