பின்னர் 2017ம் ஆண்டு அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மஹதியின் உடல் பல்வேறு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நிமிஷா ப்ரியா, கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஏமனின் சனா நீதிமன்றம் நிமிஷா ப்ரியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து. அதன்படி நிமிஷா ப்ரியாவுக்கு நாளை மறுதினம் ஏமனில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.இதையடுத்து கேரள செவிலியர் நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஒப்பு கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்ஷூ துலியா, ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனால்,” கேரள செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏமனில் என்ன நடக்கிறது என்று எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஏமன் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள வழக்கறிஞருடன் தொடர்பில் உள்ளோம். பேச்சுவார்த்தைகள் நடப்பதால் மரண தண்டனையைத் தாமதப்படுத்தக் கோரிக்கை விடுத்து வருகிறோம். நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் ஒரே வழி ரத்தப் பணம் தான். ஏமனில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ரத்தப் பணம் வாங்கி சமரசம் செய்து கொள்வது மட்டுமே ஒரே வழி”இவ்வாறு தெரிவித்தார். ஒன்றிய அரசு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிப்பதே ரத்தப் பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கேரள செவிலியருக்கு தூக்கு தண்டனை : நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் ஒரே வழி ரத்தப் பணம் தான்: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
