பல்வேறு திரைத்துறை விருதுகள், ஒன்றிய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், 2008ல் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ஒன்றிய அரசின் தேசிய விருது உளிட்ட விருதுகளை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 1997ல் தமிழ்நாடு அரசு சார்பில் நடிகை சரோஜாதேவிக்கு எம்ஜிஆர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகரும், ம.நீ.ம. கட்சித்தலைவருமான கமல்ஹாசன்
இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தில் கூறியதாவது;
என்னைப் பார்க்கும் இடமெல்லாம் – என் எந்த வயதிலும் – கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
The post செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா: கமல்ஹாசன் உருக்கம்! appeared first on Dinakaran.
