லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்ததால் இன்று கடைசி நாள் அடம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தபோது வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சு மூலம் 38 ரன்கள் சேர்பதற்க்குள் 5 விக்கெட்களை இழந்தது இறுதியில் இங்கிலாந்து 192 ரன்களுக்குள் சுருண்டது.
193 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரன் கணக்கை தொடங்காமல் அட்டமிழந்து வெளியேறினார். கருண் நாயர், கேப்டன் கில், நைட் வாட்ச்மேனாகா களமிறங்கிய ஆகாஷ் தீப் ஆட்டமிழந்தார் . கடைசி நாள் ஆட்டமான இன்று இந்திய அணி வெற்றிக்கு மேலும் 135 ரன்கள் தேவை. இங்கிலாந்து 6 விக்கெட்களை வீழ்த்தினால் வெற்றியை வசப்படுத்தும் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The post லார்ட்ஸ் டெஸ்ட் : இன்று கடைசி நாள் ஆட்டம்: வெல்லப்போவது யார்? appeared first on Dinakaran.
