தமிழ்நாடு முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன?: காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிரவாரண்டை அமல்படுத்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிடிவாரண்டை அமல்படுத்த சென்னை நீலாங்கரை போலீசுக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பல வழக்குகள் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. தமிழ்நாடு முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது என டிஜிபி, சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

The post தமிழ்நாடு முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன?: காவல்துறைக்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: