சென்னை: இனிய பாடல்களுக்கு நடிப்பால் பொலிவூட்டி மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர் என பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். தென்னிந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களை அளித்தவர். அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்டவர். சுமார் 200 படங்களில் நடித்து தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் என புகழஞ்சலி செலுத்தினார்.
The post இனிய பாடல்களுக்கு நடிப்பால் பொலிவூட்டி மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர்: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.
