உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம்

டெல்லி : உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான ஒரு வழியாகும். இந்தியாவில், மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், டெஸ்லா, வின்ஃபாஸ்ட், கியா நிறுவன மின்சார கார்களின் விலை உள்ளிட்ட விவரங்கள் நாளை வெளியாகின்றன.

டெஸ்லா தனது மின்சார கார் ஒய் சீரிஸை அறிமுகம் செய்கிறது, ரூ.55 லட்சம் வரை விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான (VF6, VF7) முன்பதிவு நாளை (ஜூலை 15) தொடங்குகிறது. விரைவில், முழு வீச்சில் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு VF6 மற்றும் VF7 மாடல் கார்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வின்பாஸ்ட் VF 6 கார் விலை ரூ.25 லட்சம், VF7 மாடல் மின்சார கார் விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே கியா நிறுவனத்தின் கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் அறிமுகமாகிறது. கியா நிறுவன கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்குள் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.

 

The post உலகின் 3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவில் நாளை அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: