டெல்லி: கேரள செவிலியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரிய வழக்கு இன்று விசாரணை நடைபெறவுள்ளது. ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. நிமிஷா பிரியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.