×

பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டித்ததால் ஆத்திரம் முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்கள் கைது

 

அம்பை, ஜூலை 14: அம்பையில் நள்ளிரவில் நடுத்தெருவில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியதை கண்டித்த முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்பாசமுத்திரம் முடப்பாலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (65). எல்ஐசியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வசிக்கும் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு சில வாலிபர்கள், கூட்டமாக சக நண்பர் ஒருவரின் பிறந்த நாளை கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி உள்ளனர்.

அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளோரின் வீடுகளுக்குள் பட்டாசு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியினர் அதிர்ச்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். மேலும் நடுத்தெருவில் நின்று நீண்ட நேரமாக கூச்சல் போட்டு இடையூறு செய்ததால் அவர்களை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் அவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

 

The post பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டித்ததால் ஆத்திரம் முன்னாள் எல்ஐசி அதிகாரி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Fury ,LIC ,Arrow ,Arrows ,Ravichandran ,Ambasamudram Muadapalam North Street ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...