மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனுமதிக்கப்படும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.