கொலை வழக்கில் 16ம் தேதி மரண தண்டனை கேரள செவிலியரை காப்பாற்ற கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள செவிலியரை காப்பாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா ப்ரியா(35). செவிலியர் படிப்பு முடித்த இவர் கடந்த 2008ம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு செவிலியர் பணிக்காக சென்றார். 2011ம் ஆண்டு கேரளா திரும்பிய நிமிஷா ப்ரியா, டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு மீண்டும் ஏமன் சென்ற நிமிஷா, அங்கு தலால் அப்தோ மஹதி என்பவருடன் சேர்ந்து ஒரு மருத்துவமனையை தொடங்கினார். இந்த மருத்துவமனையில் நல்ல வருமானம் வரத்தொடங்கியதும், மஹதி, நிமிஷா இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தலால் அப்தோ மஹதியிடம் இருந்து பாஸ்போர்ட்டை வாங்குதற்காக மஹதிக்கு அதிகளவு மயக்க மருந்தை நிமிஷா செலுத்தியதில் மஹதி உயிரிழந்து விட்டார்.

பின்னர் 2017ம் ஆண்டு அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மஹதியின் உடல் பல்வேறு துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நிமிஷா ப்ரியா, கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ஏமனின் சனா நீதிமன்றம் நிமிஷா ப்ரியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து. அதன்படி நிமிஷா ப்ரியாவுக்கு நாளை மறுதினம் ஏமனில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள செவிலியர் நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஒப்பு கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதன்ஷூ துலியா, ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

The post கொலை வழக்கில் 16ம் தேதி மரண தண்டனை கேரள செவிலியரை காப்பாற்ற கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: