பாஜவுக்கு வேதாந்தா நிறுவனம் வழங்கிய நன்கொடைகள் 4 மடங்கு அதிகரிப்பு

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு வேதாந்தா வழங்கும் நன்கொடைகள் கிட்டத்தட்ட 4 மடங்காக அதிகரித்துள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் வேதாந்தா லிமிடெட் நிறுவனமும் ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு நன் கொடை அளிப்பதில் முன்னணி வகிக்கிறது வேதாந்தா லிமிடெட் நிறுவனம். கோடீஸ்வரர் அனில் அகர்வாலின் வேதாந்தா லிமிடெட் நிறுவனம் ஆளும் பாஜவுக்கு வழங்கிய நன்கொடைகள் கிட்டத்தட்ட 4 மடங்காக அதிகரித்து கடந்த மார்ச் 2025ல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.97 கோடியை வழங்கியுள்ளதாக அதன் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ம் ஆண்டில் அரசியல் நன்கொடைகள் மொத்தம் ரூ.157 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.97 கோடியாகும். ஆளும் கட்சிக்கான நன்கொடைகள் அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வந்த நன்கொடைகள் வெறும் ரூ.10 கோடியாக குறைந்துள்ளது.

ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரையிலான நிதியாண்டில் நன்கொடைகளில் பாஜ கட்சிக்கு ரூ.97 கோடி (மார்ச் 31, 2024 ல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.26 கோடி), பிஜு ஜனதா தளத்திற்கு ரூ.25 கோடி (மார்ச் 31, 2024: ரூ.15 கோடி), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ரூ.20 கோடி (மார்ச் 31, 2024: ரூ.5 கோடி) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.10 கோடி (மார்ச் 31, 2024: ரூ.49 கோடி)” ஆகியவை அடங்கும் என்று 2024-25 ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜவுக்கு வேதாந்தா நிறுவனம் வழங்கிய நன்கொடைகள் 4 மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: