அப்போது காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) காரில் இருந்து தாவிப் பாயும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் மோகன்ராஜ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மோகன்ராஜை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குழுவினர் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜ் உடலை பார்த்து படப்பிடிப்பு குழுவினர் நாகை அரசு மருத்துவமனையில் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post பா.ரஞ்சித் படப்பிடிப்பில் சோகம் காரில் இருந்து தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் பலி appeared first on Dinakaran.
