நடுத்தர மக்களுக்கு நற்செய்தி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு? அடுத்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தி 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை ஒன்றிய அரசு குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் இம்மாதத்தில் நடக்க உள்ளது. அதில் 12% வரம்பில் உள்ள நெய், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மொபைல் போன்கள், பழரசங்கள், ஊறுகாய், ஜாம், குடைகள், சைக்கிள், டூத்பேஸ்ட், ஷூ, ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் 5% அல்லது 0% வரம்பிற்குள் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 28 சதவீத வரம்பில் உள்ள ஏசி உள்ளிட்ட பொருட்களும் குறைவான வரம்பிற்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். காப்பீட்டு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியை 18ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க காப்பீடு நிறுவனங்கள் சம்மதித்துள்ள நிலையில், இதை பூஜ்ஜிய வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.

The post நடுத்தர மக்களுக்கு நற்செய்தி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு? அடுத்த கவுன்சில் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: