2 குழந்தைகளுடன் 2 வாரமாக உணவு, தண்ணீர் இல்லாமல் குகையில் ரஷ்ய பெண் தியானம்: கர்நாடக போலீசார் விசாரணை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகர்ணா குகையில் 2 குழந்தைகளுடன் 2 வாரமாக உணவு, தண்ணீரின்றி தியானத்தில் இருந்த ரஷ்ய பெண்ணை போலீசார் மீட்டனர். ரஷ்யாவைச் சேர்ந்த 40 வயது பெண் நீனா குட்டினா என்ற மோஹி. இவர் தனது 2 குழந்தைகளுடன் பிசினஸ் விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார்.

கோவாவிலிருந்து கர்நாடகாவிற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த மோஹி, வடகனரா மாவட்டம் கும்டா தாலுகாவில் ராமதீர்த்தா மலையில் உள்ள குகை ஒன்றில் 2 வாரங்களாகத் தங்கியிருந்திருக்கிறார். இந்து மதம் மற்றும் இந்திய ஆன்மீக மரபுகளால் ஈர்க்கப்பட்ட மோஹி, தனது குழந்தைகளான பிரேயா (6) மற்றும் அமா (4) ஆகியோருடன் 2 வாரமாக குகையில் தங்கி பூஜைகள் செய்து, தியானத்தில் இருந்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமான ரோந்து சென்ற போலீசார், கோகர்ணா குகையில் மோஹி மற்றும் அவரது குழந்தைகளை கண்டு மீட்டனர். அடர்ந்த காட்டுக்குள் உள்ள குகையில், 2 வாரமாக மோஹி அவரது குழந்தைகளுடன் தங்கியிருந்தது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தைகளை வைத்துக்கொண்டு 2 வாரமாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி எப்படி அவர் இருந்தார் என்பது போலீசாரையே வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

மோஹியிடம் போலீசார் விசாரிக்கையில், ‘அவரது விசா 2017ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரஷ்ய பெண் மோஹி மற்றும் அவரது குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவன உதவியுடன் ஒரு இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்துவிட்டு, இதுதொடர்பாக ரஷ்ய தூதரகத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post 2 குழந்தைகளுடன் 2 வாரமாக உணவு, தண்ணீர் இல்லாமல் குகையில் ரஷ்ய பெண் தியானம்: கர்நாடக போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: