சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தாம் வகிக்கும் பதவிக்குண்டான வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அரசமைப்பு சட்ட பிரிவு 370 ஒரு வரலாற்று பிழை என்று கூறுகிறார். இத்தகைய வரலாற்று பின்னணியை புரிந்து கொள்ளாத ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசமைப்பு சட்டப் பிரிவு 370 என்பது ஒரு வரலாற்று பிழை என்று கூறுவது அவரது அரசியல் அறியாமையையும், காழ்ப்புணர்ச்சியையும் தான் காட்டுகிறது.
அந்த மாணவர்களின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாதவர்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. எனவே, ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத கொள்கைகளை பிரசாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத கொள்கைகளை பிரசாரம் செய்யும் ஊதுகுழலாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.