இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிப்பதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை செயலருக்கு வந்துள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜியிடமிருந்து தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் 3 நியமன எம்எல்ஏக்களான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் நேற்று கவர்னர், தலைமை செயலகத்துக்கு வந்தது. இதையடுத்து அமைச்சர் ஜான்குமாரும், 3 நியமன எம்எல்ஏக்களும் வருகிற 14ம்தேதி பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜான்குமாருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதேபோல் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
The post புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் வருகிற 14ம்தேதி பதவியேற்கிறார்: 3 நியமன எம்எல்ஏக்களும் ெபாறுப்பேற்பு appeared first on Dinakaran.
