பருவமழை குறைவால் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சி உற்பத்தி பணி தீவிரம்

*டிராக்டர் மூலம் உலர வைக்க ஏற்பாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழை குறைவால், மஞ்சி உற்பத்தி மீண்டும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுடி அதிகமாக உள்ளது. தென்னை விவசாயம் அதிகமாக இருப்பதால், சுற்றுட்டார கிராம பகுதிகளில் தென்னையை மையமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட மஞ்சி தொழிற்சாலைகள் செயல்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் மஞ்சி பொருட்கள் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது மஞ்சி உற்பத்தி அதிகரிக்கிறது. இருப்பினும், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நார் உலர வைக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படும்.

இந்நிலையில், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை அவ்வப்போது தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் மஞ்சி உலர வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல தொழிற்சாலைகளில் கலன்களில் உலர வைக்கப்பட்ட மஞ்சி மழை நீரில் நனைந்துள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த சிலநாட்களாக சிலநேரம் சாரலுடன் மழை பெய்து நின்று போனது. மழை குறைந்து வெண்ணிர வெயிலின் தாக்கத்தால், கலன்களில் மீண்டும் மஞ்சி உலர வைத்து உற்பத்தியை அதிகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் டிராக்டர் மூலம் மஞ்சி உலர வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சில வாரத்துக்கு பிறகு மஞ்சி உலர வைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளதால், அடுத்து மழை வலுப்பதற்குள் மஞ்சி உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கையில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post பருவமழை குறைவால் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சி உற்பத்தி பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: